PUBLISHED ON : செப் 20, 2026

நலந்தானா... நலந்தானா...
'மனசாட்சி உறங்குகையில் மனக்குரங்கு ஊர்
சுற்ற கிளம்பி விடுகிறது' என்று நம் முன்னாள் முதல்வர் கருணாநிதி
சொல்வாரே... அதை நினைவில் நிறுத்தி, மனசாட்சியோடு பதிலளிக்குமாறு உடல் நலன்
மீண்டிருக்கும் தி.மு.க., தலைவரை வாழ்த்தி வேண்டுகிறது தமிழகம்!
1. 'என் அரசியல் எதிரி தி.மு.க.,தான்; மு.க. ஸ்டாலின்தான்' என்று முடிவு செய்து, அதை முரசறைந்து வெற்றி கண்ட சி.ஜோசப் விஜய் - எதிரில் அமர்ந்து இருப்பவரை வேறு வழியின்றி எதிரியாக பாவிக்கும் உதயநிதி ஸ்டாலின்; இருவரில் யார் அரசியல் சாணக்கியன்?
2. தி.மு.க., அர சை 'மூன்றாம் தர அரசு' என சட்டசபையில் விமர்சித்ததும், 'இல்லை... பிராமண, சத்ரிய, வைசிய, சூத்திர வரிசையில் இது நாலாந்தர அரசு' என சாமர்த்தியம் காட்டி ஓட்டு அள்ளியவர் கருணாநிதி; சொல்லுங்கள்... 'கரூர் கம்பெனி' என்பதற்கு 'சங்கி' என்பது சிறந்த பதிலடியா?
3. உறங்க விடாத மின்தடை, ஒழிக்க முடியாத 'டெங்கு' கொசுக்கள், முற்றுப்புள்ளிக்கு இடம் தராத கொலைகள்... இம்மாற்றங்களில் கூட மனம் மாறாத தமிழக இளைஞர்கள், உங்கள் 'திராவிட மாடல்' ஆட்சி புகட்டிய கல்வி தரத்தின் சிறந்த சான்றுகள்; சரிதானே?
4. 'குதிரை பேர ஆட்சி முடிவுக்கு வருவது மட்டுமே தமிழகத்தை காப்பாற்றும்' என்று நீங்கள் குற்றம் சாட்டுவது வாடிக்கை தானாமே; இதுகூட, ஜூன் 26, 2017ல் அப்போதைய அ.தி.மு.க., ஆட்சிக்கு எதிராக நீங்கள் பொங்கிச் சொன்னதாமே... உண் மையா?
5. 'பதவி அதிகாரத்தை பொறுப்பேற்ற முதல்நாளில் இருந்தே அனுபவிப்போம்; ஆனால், பதவிக் குரிய கடமைகளைச் செய்ய பயிற்சி காலம் கேட்போம் என்பது எந்தவகையில் நியாயம்' எனும் சிந்தனை, மதுராந்தகம், தாராபுரத்தில் எழுந்திருக்கும் என நம்புகிறீர்களா?
6. பழுத்த அரசியல்வாதியாகச் சொல்லுங்கள்... சட்டசபை கடைசிநாள் களேபரங்களைப் பார்த்து, பெரும் அமைதி காத்த முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு சபாநாயகர் வாசித்த பாராட்டு பத்திரம், அ.தி.மு.க., எனும் 'மா' மரத்திற்கு ஊற்றப்பட்ட பன்னீரா... வெந்நீரா?
7. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சிறப்பாகவும், நடுநிலையோடும் சட்டசபையை நடத்து வதாக அன்று கவிஞர் வைரமுத்துவிடம் நீங்கள் பாராட்டி இருந்தீர்களே... அந்த பாராட்டு மொழியில் இப்போதும் அதே உறுதியோடு இருக்கிறீர்களா?
7 ½ 'ரீல்ஸ்' - 'திராவிட மாடல்' மரபுதானே?
