
'இவர் இங்கே' என்றுரைக்கும் முகவரி அல்ல இது; 'இவர் இப்படி' என்று சொல்லும் முகவரி!
இந்த வாரம்... 'நீங்க கேள்விப்பட்டது உண்மைதான்; பெரும்பாலான திரு நெல்வேலி குடும்பங்கள்ல என் அம்மாவோ, மனைவியோ பிரசவம் பார்த்து பிறந்த ஓர் உயிர் நிச்சயம் இருக்கும்!' - ஆலமரத்து கிளை யாய் பேசும் இவர், லட்சுமி மாதவன் மருத்துவமனையின் இயக்குனர்; 26 ஆண்டு கள் அனுபவ மிக்க பச்சிளம் மற்றும் குழந் தை கள் சிறப்பு மருத்துவர்... மாணிக்கவாசகம்.
உட் கொண்ட மருந்துகளின் விளைவுகளைச் சொல்லத் தெரியாத குழந்தைகளின் மருத்துவர்... நிபுணரா?
'மவுனங்களோட அர்த்தங்களை புரிஞ்சுக்கப் பழகாததுதான் வாழ்க்கையோட அசவுகரியங் களுக்கு காரணம்'ங்கிறது உண்மைன்னா, குழந்தைகளோட அழுகையில இருந்து அவங்க சிரமங்களை சரியா உணர்ற நாங்கதான் உண்மையான நிபுணர்கள் !
குழந்தைகளின் அழுகைக்கு மத்தியில் பணி; வெறுப்பாக இல்லையா?
என் அம்மா ராமலட்சுமி பார்த்த பிரசவங்கள் ஒரு லட்சத்துக்கும் மேல; என் மனைவி மது பாலா, 50 ஆயிரத்தை நெருங்கியாச்சு; பிறந்த சிசுவோட அழுகையில பணி நிறைவை உணர்ற குடும்பம்; எனக்கு இது ஓசையல்ல... இசை!
ஒரே நேரத்தில் உறவினர் குழந்தைக்கும், பிற குழந்தைக்கும் அவசர சிகிச்சை தேவை; யார் பக்கம் நிற்பீர்கள்?
ஹா... ஹா... அவசர சிகிச்சை தேவைப்படுற உயிருக்கு பக்கத்துல, ஓர் உறவா போய் நிற்கி றதுல பிரயோஜனமே இல்லை; என் அனு பவம் தேவைப்படுற படுக்கையை நோக்கி மருத்து வரா நான் ஓடணும்; அதுதான் தர்மம்!
'வளர்ந்த குழந்தைகள்' - உங்கள் பார் வையில் யார்?
என் பேராசிரியர் டாக்டர் பாலசுப்பிரமணியம் வழியில, 'பாராசிட்டமால்'ல குணமாகுற காய்ச்சலுக்கு நான் 'ஆன்டிபயாடிக்' எழுது ற தில்லை; நேர்மையான இந்த சிகிச்சையை, 'கூகுள்' உதவியோட உரசிப் பார்க்குறவங்க... வளர்ந்த குழந்தைகள்!
'பாசம், அன்பு எல்லாம் வேஷத்தின் பரிமாணங் கள்' என்றால் ஏற்றுக் கொள்வீர்களா?
பிறப்பு செய்தி / நோய் குணமான செய்தி க ளு க்கு ஆனந்த கண்ணீரும், இறப்பு செய்தி க ளுக்கு துக்க கண்ணீரும் என்னைக்கு வற்றிப் போகுதோ, அந்த நிமிஷமே 'அன்பு, பாசம் எல் லாம் வேஷம்'னு மனப்பூர்வமா ஏத்துக்குறேன்!
சரி... பலவீனமானது தாய் மனதா... தந்தை மனதா?
குழந்தைக்கு ஒரு பிரச்னைன்னு சொல் றப்போ தாயோட கண்ணீர் கன்னங்கள்ல உருளும்; தந்தை யோட கண்ணீர் மனசுக் குள்ளே இறங்கும்; ஆனா, உடைஞ்ச வேகத் துல மீண்டு வர்றது தாயா, தந்தை யான்னா... அது, அம்மா தான்!
'டீச்சர், டாக்டர்' ஆவதற்கு குழந்தைகள் ஆசைப்படு ம் உளவியல் ரகசியம் என்ன?
'என் அம்மா - அப்பாதான் உலகத்துல பெரிய ஆள்'னு குழந்தைகள் நினைச்சுட்டு இரு க்கு றப்போ, அவங்களையே பணிய வைக்கிற முதல் இடமா குழந்தைகள் பார்க்குறது மருத்துவ மனை; அடுத்ததா... பள்ளி; விதைக்கிறதுதானே விளையும்!
'உடல் குறைபாட்டுடன் பிறப்பு' - காரணம் கடவுளா?
' இல்லை'ங்கிறது ஒரு மருத்துவரா என் பதி ல் ; ஆனா, 'நாங்க ஆரோக்கியமா இருக் குறப்போ, யாருக்கும் தீங்கு செய்யாதப்போ என் குழந் தைக்கு ஏன் டாக்டர் இப்படி'ங்கிற கேள்வியை, என் பதில் திருப்திப்படுத்தினதே இல்லை!
இந்த பணி உங்களை அழ வைத்ததுண்டா டாக்டர்?
தாமதமா கிடைச்ச பிள்ளை வரம், 'அப்பா, அம்மா...'ன்னு கூப்பிட்டு குஷிப்படுத்துறதை பார்க்க சந்தோஷமா இருக்கும்; ஆனா, அந்த பிஞ்சுக்கு 'ரத்த புற்றுநோய்'னு விதி என்னையே சொல்ல வைக்கும் பாருங்க... சமீபத்துல கூட அப்படி நொறுங்கிட்டேன்!
மரணம் வரை மனிதனோடு ஒட்டியிருக்கும் மழலை குணம் - எதைச் சொல்வீர்கள்?
எப்போ ஒரு குழந்தை தன் கோபத்தை கோபமாகவே வெளிப்படுத்த கத்துக்குதோ அப்பவே தன் அழுகையை நிறுத்திடுது; கோபப்பட இயலாத முதுமையில மறுபடியும் கண்ணீர்; ஆக, என்னோட பதில்... அழுகை!
இன்றைய பெற்றோர் குழந்தைகளுக்கு ஊட்டும் நோய்?
'நான் கதை சொன்னாத்தான் என் பிள்ளை சாப்பிடும்'னு இப்போ யாரும் சொல்றதில்லை; ஸ்மார்ட்போனை கையில கொடுத்து, கடையில வாங்கினதை ஊட்டிவிட்டு, தனியா துாங்குற துக்கு பழக்கி... ம்ஹும்... இது மனக்கொல்லி!
தந்த சிகிச்சைகளின் எண்ணிக்கைக்கு இணை யாக 'நன்றி' கிடைத்திருக்கிறதா?
'உங்களாலதான் என் குழந்தை உயிரோட இருக்கு'ன்னு 'மாணிக்கவாசகி' ன்னு அவளு க்கு பெயர் சூட்டி, அம்மாவும் அப்பாவும் கைகூப்பி நின்னப்போ, நான் எனக்குள்ளே கடவுள் பாதத்தை கண்ணுல ஒத்திக்கிட்டேன்; இதுல, எது நன்றி?
இறந்தவர் மீண்டும் வர வாய்ப்பு எனில் யார் வர விருப்பம்?
எனக்கு எல்லாமுமான என் அப்பா... டாக்டர் மாதவன்.