PUBLISHED ON : ஆக 17, 2025

அப்போாாா... உங்க கேள்விக்கு பதில் சொன்னாத்தான் என் மாதவியை தேடுறதுக்கு உதவி பண்ணுவீங்க... அப்படித்தானே; சரி... கேளுங்க!
வாத்தியாரே... 'ஜாதி மறுப்பு' திருமணம்னு சொல்றாங்களே... அப்படின்னா என்ன?
அதாவது மண்ட கஷாயம்... 'என் திறமையை விட என் ஜாதியாலதான் எனக்கு சலுகையும், வேலையும் கிடைக் கும்னா, அது எனக்கு வேண்டாம்'னு 'ஜாதி மறுப்பு' பேசாம, 'ஜாதி சான்றிதழ்' மூலமா சகலத்தையும் சாதிச்சுட்டு, 'நான் வேற ஜாதி ஆளைத்தான் காதலிப்பேன்'னு பிடிவாதமா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறாங்க பாரு... அதான், 'ஜாதி மறுப்பு' திருமணம்!
அருமையான இந்த 'சமூக நீதி' மேட்ட ருக்கு ஏன் வாத்தியாரே இவ்வளவு எதிர்ப்பு?
பேயியியி... இப்போ 'கொரோனா' வந் தப்போ, 'பயப்படாம தடுப்பூசி போட்டுக் கோங்க... இந்தா... நான் போட்டுக்கிறேன் பாருங்க'ன்னு, 'ஆர்ம்ஸ்' காமிச்சு நமக்கு தைரியம் சொல்ல எவ்வளவு பேர் வந் தாங்க; அதுல முக்கியமான யாராவது ஒருத்தர்...
'எல்லாரும் சமம்'னு சொல்ற நம்ம அரசு தயாரிச்சு வைச்சிருக்கே ஒரு ஜாதிப் பட்டியல்... அந்த பட்டியல் அடிப்படை யில, தன் ஜாதிக்கு கீழே இருக்குற ஒரு குடும்பத்துல சம்பந்தம் பண்ணி, ஒரு ' கல் யாண படம்' காட்டியிருந்தா மக்களு க்கு விழிப்புணர்வு வந்திருக்கும்; இந்த எதி ர்ப்பு இருந்திருக்காது!
இதுக்கு பதிலாத்தான் எல்லார் வீட்டுக் கும் போய் சாப்பிடுறாங்களே... அது போதாதா வாத்தியாரே?
ஏன் திமிங்கிலம்... ' ஒடுக்கப்பட்டவர் கள்'னு சொல்லப்படுறவங்க வீட்டுக்குப் போய் கை நனைச்சு தன் இமேஜை உயர்த் திக்கிற பெரிய மனுஷன், ஏன் அவங்களை தன் வீட்டுக்கு கூப்பிட்டு தன் குடும்பத் தோட பழக வைச்சு, தன்னோட தட்டுல சாப்பாடு போட மாட்டேங்குறான்; என்ன... உடம்பு உதறுதுல்ல...
வாத்தியாரே... காலையில சுகர் மாத்திரை போடலை; வீடு வரைக்கும் போயிட்டு வந்திரவா?
ம்ஹும்... உன்னையெல்லாம் தன் 'பாடி கார்டு'ன்னு 'பாட்ஷா பாய்' எப்படித்தான் நம்புனாரோ; போ... போ...