PUBLISHED ON : ஆக 31, 2025

'கிளம்பலாமா... நல்லா உட்கார்ந்துட்டீங்களா?'
வேலுார், பேரணாம்பட்டு, பாஸ்மார் பெண்டா மலை கிராமத்தின் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் தினகரன், மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க சொந்தமாக ஆட்டோ வாங்கி, 5 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து மாலையில் வீடு சேர்க்கிறார்!
பள்ளி: கடந்த சில காலங்களில் நிறைய குழந்தை திருமணங்கள் நிகழ்ந்த பகுதி இது. 55 வயது நிரம்பி இருக்கும் இப் பள்ளியால் கல்வி வெளிச்சம் பரவத் துவங்கிய பிறகே இக்கொடுமை இங்கு குறையத் துவங்கி இருக்கிறது. இன்று... இம்மண்ணின் பெண் பிள்ளைகள் உயர் கல்வியை நோக்கி பயணப்படுகின்றனர்!
பெருமை: 'காட்டுவழி பாதையை நினைச்சு அடிக் கடி ஸ்கூலு க்கு லீவ் போட் டுட்டு இருந்தேன். தினகரன் சார் ஆட்டோ வந்ததுக்கு அப்புறம் நான் லீவ் எடுக்குற தில்லை. ' அவரும், இந்த ஸ்கூலும் மட்டும் இல் லேன்னா, நான், நீ, தங்கச்சி எல்லாம் படிச்சிருக்க முடியாது. நம்ம ஸ்கூல்... இன்னொரு அம்மா'ன்னு 10ம் வகுப்பு படிக்கிற என் அக்கா அடிக்கடி சொல்வாங்க!' - சுந்தர், 5ம் வகுப்பு.
கோரிக்கை: 'பத்து பேர் படிக்க வந்துட மாட்டாங்களான்னு இருந்திருக்கேன். இன்னை க்கு இங்கே 110 மாண வர்கள் படிக்கிறாங்க! ஒரு 'கம்ப்யூட்டர் லேப்' இருந்தா, தேனைத் தேடி வர்ற தேனீக்களா நிறைய பிள்ளைகளை இங்கே வரவைச்சிட முடியும்!' என்கிறார் தலைமை ஆசிரியை திருமலைச்செல்வி.