/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்மார்ட்போன் & கேட்ஜெட்ஸ்
/
ப்ளூபங்க்ட் பிஎஸ்150; சூட்கேஸ் வடிவில் பார்ட்டி ஸ்பீக்கர்!
/
ப்ளூபங்க்ட் பிஎஸ்150; சூட்கேஸ் வடிவில் பார்ட்டி ஸ்பீக்கர்!
ப்ளூபங்க்ட் பிஎஸ்150; சூட்கேஸ் வடிவில் பார்ட்டி ஸ்பீக்கர்!
ப்ளூபங்க்ட் பிஎஸ்150; சூட்கேஸ் வடிவில் பார்ட்டி ஸ்பீக்கர்!
UPDATED : செப் 26, 2023 06:04 PM
ADDED : செப் 26, 2023 06:02 PM

ப்ளூபங்க்ட் நிறுவனம் சூட்கேஸ் மாடலில் பிஎஸ்150 எனும் பார்ட்டி ஸ்பீக்கரை (Blaupunkt PS150 Party Speaker) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
ஜெர்மன் ஆடியோ விஷுவல் பிராண்ட் ஆன ப்ளூபங்க்ட் நிறுவனம் ப்ரீமியம் ரக ஸ்பீக்கர்கள், வூஃபர்கள் சவுண்ட் பார்கள், ஸ்மார்ட் டிவி, ஹெட்போன்கள், இயர்பட்ஸ் மற்றும் கார் ஆடியோ அக்ஸசரிஸ்கள் என ஏராளமான தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது ப்ளூபங்க்ட் நிறுவனம் சூட்கேஸ் மாடலில் பிஎஸ்150 எனும் அவுட்டோர் பார்ட்டி ஸ்பீக்கரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
![]() |
இதுமுற்றிலும் சூட்கேஸ் வடிவிலான பார்ட்டி ஸ்பீக்கராகும். எளிதில் எங்கும் எடுத்துச்செல்லும் விதமாக சக்கரங்களுடன்கூடிய போர்டபிள் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளூபங்க்ட் பிஎஸ்150 பார்ட்டி ஸ்பீக்கர் 7.5 கிலோ எடைக் கொண்டுள்ளது. ஆடியோ அம்சங்களை பொறுத்தவரை, இந்த ப்ளூபங்க்ட் பிஎஸ்150 பார்ட்டி ஸ்பீக்கர் 100W சவுண்ட் அவுட்புட் வழங்கப்பட்டுள்ளது. அதோடு சிறந்த் ஆடியோ அனுபவத்தை வழங்க எஸ்க் பேஸ் ஆடியோ (X Bass Audio) அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
![]() |
இதுதவிர, ப்ளூடூத் வெர்ஷன் 5.0 (Bluetooth Version 5.0) மற்றும் ப்ளூடூத் ஏ2டிபி ப்ரொஃபைல் (Bluetooth A2DP Profile) கனெக்டிவிட்டி மற்றும் டிடபுள்யூஎஸ் (TWS) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ் (AUX) மற்றும் யுஎஸ்பி (USB) சப்போர்ட் உள்ளது. நீண்ட நேர பேக்கப் வழங்க இந்த பிஎஸ்150 பார்ட்டி ஸ்பீக்கர் 4500mAh பேட்டரி மற்றும் IPX4 தர ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Splash Resistant) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் மைக் (Mic) மற்றும் கரோக்கி ரெடி (Karaoke Ready) வழங்கபட்டுள்ளது.
![]() |
கன்ட்ரோல்களுக்கு எக்ஸ் பேஸ் ஸ்விட்ச் (X Bass Switch), சோர்ஸ் செலெக்ட் (Source Select), டிராக் அண்ட் வால்யூம் டயல் (Track and Volume Dial) ஆகியவை வருகின்றன. இத்துடன், எல்இடி டிஸ்பிளே (LED Display), கன்ட்ரோல் பட்டன்கள் (Control Buttons), வால்யூம் பூஸ்டர் (Volume Booster) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
![]() |
அதோடு ஆர்ஜிபி லைட்ஸ் (RGB LIGHTS) சப்போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ப்ளூபங்க்ட் பிஎஸ்150 போர்டபிள் பார்டி ஸ்பீக்கரின் விலை ரூ.11,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.