/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
டிரெண்ட்ஸ்
/
இந்தியாவின் அதிரடி முகத்தை காட்டிய சர்ஜிக்கல் ஸ்டிரைக்: இன்று 7ம் ஆண்டு!
/
இந்தியாவின் அதிரடி முகத்தை காட்டிய சர்ஜிக்கல் ஸ்டிரைக்: இன்று 7ம் ஆண்டு!
இந்தியாவின் அதிரடி முகத்தை காட்டிய சர்ஜிக்கல் ஸ்டிரைக்: இன்று 7ம் ஆண்டு!
இந்தியாவின் அதிரடி முகத்தை காட்டிய சர்ஜிக்கல் ஸ்டிரைக்: இன்று 7ம் ஆண்டு!
UPDATED : செப் 29, 2023 03:33 PM
ADDED : செப் 29, 2023 01:42 PM

2016 செப்டம்பரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி இந்திய வீரர்களை கொன்றனர். இந்திய ராணுவம் பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. அத்தாக்குதல் நடந்த ஏழாம் ஆண்டு தினத்தை சமூக வலைதளத்தில் பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
2016 செப்டம்பர் 18ல் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற நான்கு ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாதிகள் காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாமிற்குள் நுழைந்து 19 இந்திய வீரர்களை கொன்றனர். 30 வீரர்கள் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தேசம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்திய ராணுவம் அடுத்த 10 நாட்களுக்குள் ஒரு திட்டத்தை தயார் செய்து பாகிஸ்தானுக்கும், அந்நாட்டு ராணுவத்தின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளுக்கும் பதிலடி தர களமிறங்கியது. செப்., 29ல் துல்லியத் தாக்குல் எனும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் துவங்கியது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி நுழைந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்திருந்த 4 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. அதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்திய ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படையின் 4வது மற்றும் 9வது பட்டாலியனைச் சேர்ந்த 80 வீரர்கள் குழுவாக பிரிந்து குப்வாரா மாவட்டத்தின் நவ்காம் செக்டார், பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக நுழைந்து 3 கிலோமீட்டர் வரை நடந்தே சென்று அங்கிருந்த பயங்கரவாதிகள் முகாமை கையெறி குண்டுகள், 84 எம்.எம்., ராக்கெட் லாஞ்சர்ஸ் கொண்டு அழித்தனர். மீண்டும் இந்திய எல்லைக்குள் திரும்புகையில் ஒருவர் மட்டும் கன்னிவெடியால் காயமடைந்தார். சர்ஜிக்கல் ஸ்டிரைக் மோடியின் தைரியமான தலைமையினால் ஏற்பட்ட சம்பவம் என்று பா.ஜ.க.,வினர் குறிப்பிட்டனர். பாகிஸ்தான் தரப்போ அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை, இரு தரப்பிலும் எல்லையில் துப்பாக்கிச் சூடு மட்டுமே நடைபெற்றது என தெரிவித்தது. காங்கிரசின் திக் விஜய் சிங் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பாக மோடி அரசு பொய் சொல்வதாகவும், பலரைக் கொன்றதற்கான ஆதாரங்களைக் கொடுக்கவில்லை என்று கூறினார். இது சர்ச்சை ஆனது. ராகுல் காந்தி இந்திய ராணுவத்தை நம்புவதாகவும், திக் விஜய் சிங்கின் கருத்து அவரது சொந்தக் கருத்து என்றும் அப்போது குறிப்பிட்டார்.