sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தென் ஆப்ரிக்க அணி வெற்றி

/

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தென் ஆப்ரிக்க அணி வெற்றி

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தென் ஆப்ரிக்க அணி வெற்றி

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தென் ஆப்ரிக்க அணி வெற்றி

3


UPDATED : நவ 16, 2025 03:26 PM

ADDED : நவ 16, 2025 11:34 AM

Google News

3

UPDATED : நவ 16, 2025 03:26 PM ADDED : நவ 16, 2025 11:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 159 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 37/1 ரன் எடுத்து, 122 ரன் பின்தங்கியிருந்தது.

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய பேட்டர்கள் விரைவாக வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். சைமன் ஹார்மர் 'சுழலில்' வாஷிங்டன் சுந்தர் (29) சிக்கினார். கேப்டன் சுப்மன் கில் (4) 'ரிட்டையர்ட் ஹர்ட்' முறையில் பெவிலியன் திரும்பினார். மஹாராஜ் ஓவரில் ரிஷாப் பன்ட் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார்.

மஹாராஜ் பந்தில் ராகுல் (39) அவுட்டானார். தனது விளாசலை தொடர்ந்த ரிஷாப் பன்ட் மீண்டும் மஹாராஜ் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். பாஷ் பந்தில் ரிஷாப் (27) அவுட்டாக, ஸ்கோர உயர வாய்ப்பு இல்லாமல் போனது. ஹார்மர் பந்துவீச்சில் துருவ் ஜுரல் (14), ரவிந்திர ஜடேஜா (27), அக்சர் படேல் (16) வெளியேறினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 189 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 30 ரன் முன்னிலை பெற்றது.

பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, இந்திய 'சுழலில்' சிதறியது. குல்தீப் பந்தில் ரிக்கிள்டன் (11) எல்.பி.டபிள்யு., ஆனார். ஜடேஜா பந்தில் மார்க்ரம் (4) அவுட்டானார். தொடர்ந்து சுழலில் மிரட்டிய ஜடேஜாவின் ஒரே ஓவரில் முல்டர் (11), ஜோர்ஜி (2) சிக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

ஜடேஜா பந்தில் ஸ்டப்ஸ் (5) போல்டானார். மறுபக்கம் அக்சர் பந்தில் கைல் (9) போல்டானார். குல்தீப் யாதவ் வலையில் யான்சென் (13) சிக்கினார். இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 93/7 ரன் எடுத்து, 63 ரன் மட்டும் முன்னிலை பெற்றிருந்தது.

இன்றைய ஆட்டத்தில் (நவ 16), கடைசி வரை தனியாக கேப்டன் பவுமா போராடி 55 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 153 ரன்களுக்கு தென் ஆப்ரிக்க அணி ஆல் அவுட் ஆனது. இந்திய அணிக்கு 124 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்திய அணியின் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், குல்தீப், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளும், பும்ரா தலா 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினர். 124 ரன்கள் என்ற இலக்குடன் 2வது இன்னிங்சில் இந்திய அணி களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆனார். கே.எல்.ராகுல் 1 ரன்னில் யான்சன் பந்தில் ஆட்டம் இழந்தார்.

ஜூரல் 13 ரன்னிலும், பண்ட் 2 ரன்னிலும், ஜடேஜா 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 31 ரன் அடித்தார். பின்னர் அவர் அவுட்டானார். குல்தீப் யாதவ் 1 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், வெற்றிக்கு 47 ரன் தேவை என்ற நிலையில், மஹாராஜ் வீசிய ஒரே ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அமர்க்களப்படுத்தினார். இதனால், இந்திய அணி வெற்றி பெறும் என்று இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கு அடுத்த பந்திலேயே அக்சர் படேல் தூக்கி அடித்த பந்தை தென் ஆப்ரிக்கா கேப்டன் பவுமா சிறப்பான கேட்ச் பிடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அக்சர் படேல் 17 பந்தில் 26 ரன் எடுத்திருந்தார்.

கேப்டன் கில் தசை பிடிப்பு காரணமாக விலகிய நிலையில், கடைசி விக்கெட்டாக சிராஜ் களமிறங்கினார். ஆனால், அவர் சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டானார். இதனால், இந்திய அணி, 2வது இன்னிங்சில் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்ரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹார்மர் 4 விக்கெட்டும் மகாராஜ் மற்றும் யான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தென் ஆப்ரிக்க அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

2010ம் ஆண்டுக்குப் பிறகு தென் ஆப்ரிக்க அணி இந்திய மண்ணில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதேபோல, கடைசியாக சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் 4ல் தோல்வியை சந்தித்துள்ளது.






      Dinamalar
      Follow us