/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
நிகழ்வுகள்
/
சின்னத்திரையில் மிரட்டபோகும் புதுவரவுகள்: ஓடிடி ரிலீஸ்..!
/
சின்னத்திரையில் மிரட்டபோகும் புதுவரவுகள்: ஓடிடி ரிலீஸ்..!
சின்னத்திரையில் மிரட்டபோகும் புதுவரவுகள்: ஓடிடி ரிலீஸ்..!
சின்னத்திரையில் மிரட்டபோகும் புதுவரவுகள்: ஓடிடி ரிலீஸ்..!
ADDED : அக் 08, 2023 04:24 PM

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு ஓடிடி தளங்கள் எடுத்து சென்றுள்ளன. சினிமாவை பார்க்காத கிராமங்கள் இல்லை என்ற அளவிற்கு, சினிமா ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்களின் பட்டியலை அறிந்து கொள்வோம்.
ஒஎம்ஜி2
அக்ஷய் குமார், பங்கஜ் திரிபாதி நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ஓ.எம்.ஜி 2. முதல் பாகம் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது.
கூஃபியா
பாலிவுட்டின் இளம் இயக்குநரான விஷால் பரத்வாஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் கூஃபியா. தபூ வமிகா கபி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 5 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது.
தி நன் 2
ஹாலிவுட் ஹாரர் படமான தி நன்2 கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது அமேசான் பிரைமில் தி நன்2 படத்தை தற்காலிக வாடகை முறையில் பார்க்கலாம்.
பார்ட்னர்
ஹரிஷ் கல்யான் நடித்து உருவாகி இருக்கும் திரைப்படம் பார்ட்னர். அக்டோபர் 6 ஆம் தேதி முதல் சிம்ப்ளி செளத் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.