/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
மைசூரின் பாரம்பரிய செருப்புகளுக்கு 'மவுசு'
/
மைசூரின் பாரம்பரிய செருப்புகளுக்கு 'மவுசு'
ADDED : ஜன 25, 2026 05:20 AM

- நமது நிருபர் -
அந்த காலத்தில் மஹாராஜாக்கள், மஹாராணிகள் சிறப்பான, வித்தியாசமான தோல் செருப்புகளை அணிந்தனர். இது அவர்களுக்கு கம்பீரத்தை அளித்தது. இது போன்ற செருப்புகள், மைசூரில் தயாராகின்றன. இப்போதும் நல்ல மவுசு உள்ளது.
தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்திலும், பலரும் பழைய வாழ்க்கை நடைமுறையில் ஆர்வம் காட்டுகின்றனர். பாரம்பரிய உணவு மட்டுமன்றி, காலில் அணியும் செருப்புகளிலும் பின்பற்றுகின்றனர். கர்நாடக அரசின் லிட்கர் நிறுவனம், மஹா ராஜாக்கள் அணிந்த தோல் செருப்புகள் போன்று, மாறுபட்ட வடிவத்தில் தயாரித்து, மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது.
காலணிகளின் அளவுக்கு தக்கபடி, விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 3,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை, விலை உள்ளது. 100 விதமான டிசைன்களில், தயாரிக்கப்படுகிறது. தரமான தோல் பயன்படுத்துவதால், நீண்ட காலத்துக்கு அறுந்து போகாது. எனவே பலரும் விரும்பி வாங்குகின்றனர். லிட்கர் நிறுவனத்துக்கும் அதிகமான ஆர்டர்கள் வருகின்றன.
செருப்பு தயாரிக்கும் தொழிலாளி ராஜு கூறியதாவது:
மஹாராஜாக்கள், ராணிகள் அணியும் செருப்பு போன்று, வித்தியாசமான செருப்புகள் தயாரித்து தரும்படி, லிட்கர் நிறுவன நிர்வாக இயக்குனர் கூறினார். அதன்படி 10 அடி நீள செருப்புகள் தயாரித்து கொடுத்தோம். வரும் நாட்களில் புது விதமான செருப்புகளை, மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய, லிட்கர் முடிவு செய்துள்ளது.
திருமணங்கள் உட்பட சுப நிகழ்ச்சிகளுக்கு இது போன்ற செருப்புகளை அணிகின்றனர். தரமான தோலில் தயாரிப்பதால், ஆரோக்கியத்துக்கும் நல்லது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தகுதியானவை. சோதனை முறையில் செய்து கொடுப்போம்.
நிறுவனத்துக்கு பிடித்திருந்தால், அதன் பின்னர் தயாரித்து அனுப்புகிறோம்.
கோல்ஹாபுரி செருப்புகள், அனைத்து இடங்களிலும் கிடைக்கும். ஆனால் லிட்கர் நிறுவனம் தயாரிக்கும் செருப்புகள் கிடைக்காது. படிக்காமல் இருந்தாலும், செருப்பு தைப்பதில் நல்ல அனுபவம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

