/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
துாக்கி வீசப்படும் தென்னை ஓலையில் துடைப்பம் தயாரிப்பு
/
துாக்கி வீசப்படும் தென்னை ஓலையில் துடைப்பம் தயாரிப்பு
துாக்கி வீசப்படும் தென்னை ஓலையில் துடைப்பம் தயாரிப்பு
துாக்கி வீசப்படும் தென்னை ஓலையில் துடைப்பம் தயாரிப்பு
ADDED : ஜன 25, 2026 05:20 AM

- நமது நிருபர் -: பெலகாவியில் தென்னை மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. பலரின் வீடுகளில் தென்னை மரங்களை பார்க்கலாம். இந்த மரங்களில் இருந்து கீழே விழும் தென்னை ஓலைகள், மட்டைகள் போன்றவை குப்பை தொட்டிகளில் வீசப்படுகின்றன. இதை, பெலகாவி மாநகராட்சி ஊழியர்கள் பலரும் கவனித்து வந்தனர். இது குறித்து, தங்கள் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இவ்விஷயத்தில் மாநகராட்சி மேயர் மங்கேஷ் பவார் திறம் பட யோசித்தார். அதாவது, குப்பை தொட்டிகளில் வீசப்படும் தென்னை ஓலைகளை வைத்து துடைப்பம் தயாரிக்கலாமே என ஆலோசித்தார். தென்னை இலைகளை, மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் வழங்கி, அவர்கள் மூலம் துடைப்பம் தயாரிக்க திட்டமிட்டார்.
செயலில் திட்டம் இதன் மூலம், ஆதரவற்றோர்களாலும் பணம் சம்பாதிக்க முடியும். மேலும், அவர்களுக்கு ஒரு பொழுது போக்காக அமையும் என கருதினார். இவர்கள் தயாரிக்கும் துடைப்பங்களை மாநகராட்சியே வாங்கவும் முடிவு செய்தனர். இதனால், ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்க திட்டம் வகுக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே இத்திட்டம் அமலில் உள்ளது.இதன் மூலம், பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஆதரவற்றோர் விடுதியில் உள்ளவர்கள், தென்னை ஓலைகளை பயன்படுத்தி துடைப்பம் தயாரித்து வருகின்றனர்.
இந்த துடைப்பம், 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு துடைப்பம் தயார் செய்யும் நபருக்கு 50 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. ஒருவர் ஒரு நாளைக்கு 5 துடைப்பங்கள் தயார் செய்யலாம். இருந்த இடத்திலிருந்த, நாளைக்கு 250 ரூபாய் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
இத்திட்டத்திற்கு ஆதரவற்றோர் மகிழ்ச்சியுடன் ஆதரவு தெரிவித்தனர். மாநகராட்சி நிர்வாகத்தை பாராட்டினர்.
12,000 தென்னை இது குறித்து, மாநகராட்சி மேயர் மங்கேஷ் கூறியதாவது:
நகரில் மொத்தம் 12,000க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இவற்றின் இலைகள் குப்பைகளாக செல்கின்றன. இதை மாற்ற முடிவு செய்து, துடைப்பம் தயாரிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆதரவற்றோர் துடைப்பம் தயாரிப்பதற்கு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இத்திட்டத்தை விரிவுபடுத்தினால் பலருக்கும் வாழ்க்கை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

