sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 16, 2026 ,தை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

பானுவாசர ஸ்பெஷல்

/

 ஆட்டோவுக்குள் 'மினி' நுாலகம் அறிவுக்கு வழி காட்டும் ஓட்டுநர்

/

 ஆட்டோவுக்குள் 'மினி' நுாலகம் அறிவுக்கு வழி காட்டும் ஓட்டுநர்

 ஆட்டோவுக்குள் 'மினி' நுாலகம் அறிவுக்கு வழி காட்டும் ஓட்டுநர்

 ஆட்டோவுக்குள் 'மினி' நுாலகம் அறிவுக்கு வழி காட்டும் ஓட்டுநர்


ADDED : ஜன 04, 2026 04:53 AM

Google News

ADDED : ஜன 04, 2026 04:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஒரு சிந்தனை, நம் வாழ்க்கையோ அல்லது ஒரு நாளையோ மாற்றி விடும்' என்ற பொன் மொழிக்கு ஏற்ப, பெங்களூரு ஆட்டோ ஓட்டுநரின் வாழ்க்கை மாறி உள்ளது.

மைசூரை சேர்ந்தவர் டேனியல் மாரடோனா, 38. சிறு வயதில் அரசு கன்னட மீடியம் பள்ளியில் படித்தார். பி.யு., கல்லுாரியில் இவருக்கு ஆங்கிலம் சரியாக வரவில்லை. அதனால், தேர்வில் தோல்வி அடைந்தார்.

ஏளனம் அதன்பின், வேலை தேடி ஒரு நிறுவனத்திற்கு சென்றார். அங்கு அவர் பேசிய ஆங்கிலத்தை கேட்டு சிரித்தனர். மற்ற நிறுவனங்களுக்கு சென்ற போதும், இதே நிலை தொடர்ந்தது. இதனால், வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தார். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து வந்தார். பின் ஆட்டோ ஓட்ட முடிவு செய்தார். தினமும் ஆங்கில நாளிதழ்களை படிக்கத் துவக்கினார். இதேபோன்று பத்து ஆண்டுகள் படித்ததன் மூலம் ஆங்கிலத்தில் புலமை பெற்றார். கல்லுாரிக்கு செல்லாமலேயே தொலை துார கல்வியில் முதுகலை பட்டம் பெற்றார். ஆனாலும், ஆட்டோ ஓட்டுவதை நிறுத்தவில்லை.

மினி நுாலகம் ஆட்டோ ஓட்டுவது மட்டுமின்றி, அந்த ஆட்டோவை மற்றவர்களுக்கு பயனுள்ளதாக மாற்ற விரும்பினார்.

ஆட்டோவில் பயணிப்போர் மொபைல் போன்களில் பாட்டு, படங்கள் பார்த்தபடியும், பேசியபடியும் பயணிப்பர். தன் ஆட்டோவில் ஏறுவோர், அவர்கள் இறங்கும் இடம் வரை, ஆக்கபூர்வமாக எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும்.

மொபைல் போனை தொடர்ந்து பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, புத்தகங்களை பார்த்து, வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினார்.

தனியார், 'செயலி' மூலம் ஆட்டோ ஓட்டும் இவரின் ஆட்டோவில், கன்னடம், ஆங்கில புத்தகங்களை அடுக்கி வைத்தார்.

முதன் முறையாக ஆட்டோவில் ஏறுபவர், அசந்து போவார். ஆட்டோவில் பயணிக்கும் போது, புத்தகங்களை வாசித்து கொண்டே இருப்பர். போக்குவரத்து நெரிசல் இருப்பதை மறந்து, அவர்கள் இறங்கும் இடத்தை அடையும் வரை, படித்து கொண்டே இருப்பர். இதனால், பொது அறிவு வளர்ந்தது.

மன நிறைவு இது தவிர, கன்னடம், ஆங்கிலத்தில் ஒரு துண்டு சீட்டில், பொன் மொழிகளை எழுதி வைத்துள்ளார். பயணியருக்கு அது பிடித்திருந்தால், அதனை எடுத்து செல்லலாம்.

இதுகுறித்து டேனியல் மாரடோனா கூறியதாவது:

தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர், என் ஆட்டோவில் ஏறுகின்றனர். 'மினி' நுாலகத்தை பார்க்கும் அவர்கள், அவர் களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்து படித்து கொண்டே வருவர். பயணியர் இறங்கும் போது, என் எண்ணத்தை பாராட்டி வாழ்த்து தெரிவிப்பர். சிலர், மொபைல் போன் மூலம் தங்கள் கருத்துகளை குறுந்தகவலாக அனுப்புவர்.

ஆரம்பத்தில் வேலை தேடி சென்ற இடத்தில் ஆங்கில புலமை குறித்து சிரித்தனர். எனவே, ஆட்டோ ஓட்டுநராக என் வாழ்க்கையை துவக்கினேன். இன்று மாதம், 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். பயணியருக்கு பயனுள்ள சேவையை செய்வதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது; மனதிற்கு நிறைவாகவும் உள்ளது.

இவ்வாறு கூறினார்.

டேனியல் மாரடோனாவை, daniel.mardona என்ற இன்ஸ்டாகிராமிலும், Daniel Mardona என்ற முகநுால் முகவரியிலும் அவரை தொடர்பு கொள்ளலாம்.

- நமது நிருபர் -:






      Dinamalar
      Follow us