sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ஆந்திர ஸ்டைல் கோங்கரா பச்சடி

ஆந்திர ஸ்டைல் கோங்கரா பச்சடி

ஆந்திர ஸ்டைல் கோங்கரா பச்சடி


UPDATED : மே 02, 2026 06:42 AM

ADDED : மே 02, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 02, 2026 06:42 AM ADDED : மே 02, 2026 04:11 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆந்திர மாநில உணவுகளில் மிகவும் பிரசித்த பெற்ற ஒன்று தான் கோங்கரா பச்சடி. சூடான சாதத்தில் இதை போட்டு சாப்பிடும் போது கிடைக்கும் சுவையே தனி தான். இந்த கோங்கரா பச்சடிக்கு பலரும் அடிமையாக உள்ளனர். ஆந்திர மாநில உணவு என்றாலும் தமிழகத்திலும் இது பிரசித்தி பெற்ற ஒன்று தான். புளிச்ச கீரை மூலம் செய்யப்படும் இந்த உணவின் செய்முறையை இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

புளிச்ச கீரை(கோங்குரா) இலை - 2 கப்

பூண்டு - 5 பல்

உரிக்காத பூண்டு - 5 பல்

காய்ந்த சிவப்பு மிளகாய் - 7

பச்சை மிளகாய் - 5

எண்ணெய் - 4 ஸ்பூன்

கொத்தமல்லி விதைகள் - 1.5 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்

கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்

சீரகம் -1 ஸ்பூன்

கடுகு - 1/2 ஸ்பூன்

வெந்தயம் - 1/4 ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொத்தமல்லி விதைகள், காய்ந்த சிவப்பு மிளகாய், சீரகம், பூண்டு, வெந்தயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கோங்குரா இலைகளை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு லைட்டாக அரைத்து பிறகு அதனுடன் வதக்கி வைத்துள்ள புளிச்ச கீரை இலைகளையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு உங்களுக்கு விருப்பமென்றால் அதனுடன் நறுக்கி வைத்துள்ள பாதி வெங்காயத்தைச் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதன் சுவை அருமையாக இருக்கும்.

அடுத்து வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து 2 டீஸ் பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த சிவப்பு மிளகாய், உரிக்காத பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.

பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள கோங்குரா விழுதை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

பிறகு உங்கள் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்து வதக்கிக்கொள்ளுங்கள். எண்ணெய் பிரிந்துவரும் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

அவ்வளவுதான் சுவையான ஆந்திரா ஸ்டைல் சுவையான கோங்குரா பச்சடி ரெடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us