ADDED : ஜன 24, 2026 05:12 AM

- நமது நிருபர் -: உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவோர், கண்டிப்பாக ராகி சார்ந்த உணவுகளை சேர்த்து கொள்வது சிறப்பு. ராகியில் தயாரிக்கும், 'ராகி சூப்'பை தினமும் பருகி வந்தால், உடல் எடை நிச்சயம் குறையும். அதற்கென, இதை மட்டுமே குடித்தால் போதுமா என்று கேட்கக்கூடாது. கடினமான உடற்பயிற்சிகளும் மிக முக்கியம்.
தேவையான பொருட்கள்
l ராகி மாவு -- 1/4 கப்
l நெய் -1 டீஸ்பூன்
l பெரிய வெங்காயம் - 1
l பீன்ஸ் - 1/4 கப்
l கேரட் - 1/4 கப்
l ஸ்வீட் கார்ன் - 1/4 கப்
l மிளகு தூள் - 1 டீஸ்பூன்
l சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
l உப்பு - தேவையான அளவு
l எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
l கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவுடன் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து கொள்ளவும். பின், வாணலியில் நெய் ஊற்றவும். அதில், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன், பூண்டு, பீன்ஸ், கேரட், ஸ்வீட் கார்ன், உப்பு, மிளகு துாள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் வேக விடவும். அதன்பின் ராகி மாவை சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான ராகி சூப் தயார்.
இந்த சூப்பை உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் மட்டுமின்றி, அனைவருமே பருகலாம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

