sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ டீ, காபியுடன் சாப்பிட முள்ளங்கி கட்லெட்

 டீ, காபியுடன் சாப்பிட முள்ளங்கி கட்லெட்

 டீ, காபியுடன் சாப்பிட முள்ளங்கி கட்லெட்


ADDED : ஜன 31, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:09 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

ஓய்வு நாளில் வீட்டில் இருக்கும் பிள்ளைகள், கணவருக்கு, டீ, காபியுடன் சேர்த்து 'ஸ்நாக்ஸ்' ஆக ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் இல்லத்தரசிகளே... முள்ளங்கி கட்லெட் செய்து கொடுத்து அசத்தலாமே.

தேவையான பொருட்கள்

l மூன்று முள்ளங்கி

l இரண்டு உருளைக்கிழங்கு

l இரண்டு பச்சை மிளகாய்

l ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

l ஒரு டீஸ்பூன் ஓமம்

l அரை டீஸ்பூன் கரம் மசாலா

l ஒரு டீஸ்பூன் மிளகாய் பவுடர்

l அரை டீஸ்பூன் மஞ்சள் பவுடர்

l இரண்டு டேபிள் டீஸ்பூன்

கடலை மாவு

l இரண்டு டேபிள் டீஸ்பூன் அரிசி மாவு

l கறிவேப்பிலை, கொத்தமல்லி

இலை, உப்பு தேவையான

அளவு

செய்முறை

உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, அடுப்பை ஆன் செய்து நன்கு வேக வைத்து கொள்ளவும். முள்ளங்கியை நன்கு தோல் சீவி துருவி எடுத்து கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து, இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, பொடிசாக நறுக்கிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, ஓமம், கரம் மசாலா, மிளகாய், மஞ்சள் பொடி, உப்பு, கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின், சிறிதளவு உருண்டையாக உருட்டி தட்டி வைத்து கொள்ளவும். அடுப்பை ஆன் செய்து, தோசை கல் வைத்து, தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், உருண்டையாக தட்டி வைத்து உள்ள கலவையை போட்டு, இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுத்தால், முள்ளங்கி கட்லெட் ரெடி.

சமோசா, வடை என்று மாலையில் ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடாமல், முள்ளங்கி கட்லெட் சாப்பிடலாம். உணவில் முள்ளங்கி எடுத்து கொள்ளாத குழந்தைகள் கூட அதில் செய்யப்பட்ட கட்லெட்டை விரும்பி சாப்பிடுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us