தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ பூரி, சப்பாத்திக்கு நீலகிரி வெஜ் குருமா

பூரி, சப்பாத்திக்கு நீலகிரி வெஜ் குருமா

பூரி, சப்பாத்திக்கு நீலகிரி வெஜ் குருமா


ADDED : ஆக 16, 2025 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2025 04:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பூரி, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிடுவதற்கு புதிதாக ஏதேனும் சமைக்க விரும்புவோருக்கு, நீலகிரி வெஜ் குருமா சரியான சாய்சாக இருக்கும். ஒரு முறை வீட்டில் சாப்பிட்டால், அடுத்த முறை வேறு எதையும் சாப்பிடத் தோன்றாது.

செய்முறை  முதலில் ஒரு கொத்து கொத்தமல்லி, அதைவிட கொஞ்சம் கம்மியாக புதினா, அரை கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் கசகசா, ஐந்து முந்திரி, நான்கு பச்சை மிளகாய் எடுத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைக்கவும்.

 வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் இரண்டு ஏலக்காய், ஒரு பட்டை, பிரியாணி இலை, நான்கு கிராம்பு, இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை நறுக்கிப் போடவும்.

 வெங்காயம் வதங்க கொஞ்சம் உப்பு சேருங்கள். அடுத்ததாக ஒரு ஸ்பூன் இஞ்சி - பூண்டு பேஸ்ட் போடவும்.

 பச்சை வாசனை போன பிறகு காலி பிளவர், பச்சை பட்டாணி, ஒரு கேரட் நறுக்கியது, ஒரு உருளைக்கிழங்கை நான்காக வெட்டி சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேகவிடுங்கள். இதில் ஒரு சிட்டிகை மஞ்சள் துாள் சேர்க்கலாம்.

 அடுத்ததாக மிக்ஸியில் அரைத்த பேஸ்ட், ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்துவிட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு மூடி எட்டு முதல் - பத்து நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கொதிக்கவிடுங்கள்.

பூரி, சப்பாத்தி உடன் - நீலகிரி வெஜ் குருமா அட்டகாசமான காம்போவாக இருக்கும்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us