sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ குட்டீஸ்களுக்கு பிடித்தமான சட்பட் எக் பிரட் மசாலா

 குட்டீஸ்களுக்கு பிடித்தமான சட்பட் எக் பிரட் மசாலா

 குட்டீஸ்களுக்கு பிடித்தமான சட்பட் எக் பிரட் மசாலா


ADDED : பிப் 14, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:49 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

அனைவரும் பரபரப்பான வாழ்க்கையில் உழல்கின்றனர். குறைவான நேரத்தில் ஊட்டச்சத்தான உணவு சமைக்க முடியாமல் திணறுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு, 'சட்பட் எக் பிரட் மசாலா' பெஸ்ட் சாய்ஸ். இது குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும். இதை எப்படி செய்வது என, பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

l பிரட் - 10 சிலைஸ்

l முட்டை - 6 முதல் 8 வரை

l வெங்காயம் - 4

l தக்காளி - 2

l பச்சை மிளகாய் - 2

l இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்

l மிளகாய் துாள் - 1 ஸ்பூன்

l மஞ்சள் துாள் - 1 ஸ்பூன்

l கரம் மசாலா - கால் ஸ்பூன்

l மிளகு துாள் - அரை ஸ்பூன்

l உப்பு - தேவையான அளவு

l எண்ணெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு

l கொத்துமல்லி இலை - ஒரு கைப்பிடி

l கறிவேப்பிலை - ஒரு கொத்து

l எலுமிச்சை ரசம் - ஒரு ஸ்பூன்

செய்முறை

முதலில் பிரட் சிலைஸ்களை, சிறு, சிறு துண்டுகளாக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும் அல்லது வெண்ணெய் போடவும். காய்ந்ததும் பிரட் துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதை தட்டில் எடுத்து வைக்கவும்.

அதன்பின் அதே வாணலியில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

இதில், நறுக்கிய தக்காளி போடவும். தக்காளி மசிந்ததும் மஞ்சள் துாள், மிளகாய் துாள், உப்பு, கரம் மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும். அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும்.

வாணலியில் உள்ள மசாலாவின் நடுவில், குழி போன்று செய்து அதற்குள் முட்டைகளை உடைத்து ஊற்றவும். அதன் மீது சிறிதளவு மிளகாய் துாள் துாவவும். முட்டைகள் கெட்டியான பின் மசாலாவுடன் சேர்த்து கலக்கவும்.

அதன்பின் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை போட்டு, நன்றாக கிளறவும்.

பிரட்கள் மசாலாவுடன் நன்றாக சேர வேண்டும். இதன் மீது பொடியாக நறுக்கிய கொத்து மல்லியை துாவி, எலுமிச்சை ரசத்தை ஊற்றி கிளறினால், சுவையான, 'சட்பட் எக் பிரட்' மசாலா தயார். குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவர். இதை செய்ய, 15நிமிடங்கள் போதும். காலை டிபனுக்கு ஏற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us