sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ சுவையான பட்டாணி பான்கேக்

 சுவையான பட்டாணி பான்கேக்

 சுவையான பட்டாணி பான்கேக்


ADDED : மே 02, 2026 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2026 03:39 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: பட்டாணி வெறும் சமையலின் சுவையை அதிகரிக்கும் காய் மட்டுமல்ல. ஆரோக்கியத்தை அளிக்கும் காயாகும். தினமும் ஒரே விதமான சிற்றுண்டி தின்று, எரிச்சலாக இருந்தால் ஊட்டச்சத்து நிறைந்த, 'பட்டாணி பான் கேக்' செய்து சுவையுங்கள்.

தேவையான பொருட்கள்: l பச்சை பட்டாணி - முக்கால் கப் (வேக வைத்தது)

l அரிசி மாவு - அரை கப்

l கடலை மாவு - அரை கப்

l மஞ்சள் துாள் - கால் ஸ்பூன்

l ஈனோ - அரை ஸ்பூ ன்

l உப்பு - தேவையான அளவு

l எண்ணெய் - 2 ஸ்பூ ன்

l தக்காளி - கால் கப்

l கேரட் - 1

l பச்சை மிளகாய் - 2

l பனீர் துருவல் - 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் வேக வைத்த பச்சை பட்டாணியை, மசித்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பட்டாணி விழுது, அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்க்கவும்.

அதில், தண்ணீர் ஊற்றி பிசையவும். இந்த கலவையில் ஈனோ சேர்த்து பிசைந்தால், மிருதுவாக இருக்கும். மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

அதன்பின், அடுப்பில் தோசைக்கல் வைத்து, எண்ணெய் தடவவும். இதில் தயார் செய்து வைத்துள்ள மாவை தோசை வார்க்கவும். இதன் மீது துருவிய பனீர், கேரட் துறுவல், பொடியாக நறுக்கிய தக்காளியை துாவவும். சுற்றிலும் நெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போடவும். இரண்டு பக்கமும், பொன்னிறமாக வெந்த ா ல், சுவையா ன பட்டாணி பான் கேக் தயார்.

தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதை தயாரிக்க, 20 நிமிடம் போதும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us