- நமது நிருபர் -:
ஆம்லெட் செய்யும் போது, எண்ணெய்க்கு பதிலாக வெண்ணெய் சேர்த்துக் கொண்டால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
காய்கறிகளை அதிக நேரம் வேகவைக்காமல், பாதியளவு வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.
தக்காளி தொக்கு செய்யும் போது சிறிதளவு சிக்கன் மசாலா சேர்த்தால் சுவை 'உச்' கொட்டும்.
இட்லி உப்புமா செய்யும் போது, காய்கறிகளை பொடியாக நறுக்கி, வதக்கி சேர்த்துக்கொண்டால், சுவையாக இருக்கும்.
வெண்பொங்கல் செய்யும் போது டால்டா சேர்த்தால் சுவை அருமை.
சட்னி தயாரிக்கும் போது, கடைசியாக கொஞ்சம் நல்லெண்ணெய், கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
கொத்துமல்லி துவையல் அரைக்கும் போது சிறிது தயிர் சேர்த்தால் சுவை சூப்பர்.
துவரம் பருப்பு வேகவைக்கும் போது, சிறிதளவு வெந்தயம் சேர்த்தால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.
வேர்க்கடலை குழம்பு செய்யும் போது, வேர்க்கடலையை ஊறவைத்து சேர்த்தால் கடலை சீக்கிரம் வெந்துவிடும்.
இட்லி பொடியுடன் வெங்காயத்தை சேர்த்து மிக்சியில் அரைத்தால், வித்தியாசமான சுவையுடைய வெங்காய சட்னி தயார்.

