sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ செட்டிநாடு ஸ்டைல் பழ பாயசம்

 செட்டிநாடு ஸ்டைல் பழ பாயசம்

 செட்டிநாடு ஸ்டைல் பழ பாயசம்


ADDED : பிப் 21, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 04:23 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

ஹிந்துக்கள் வீடுகளில் நடக்கும் சுபநிகழ்ச்சிகள், பண்டிகைகளில் சமையலுடன் பாயசம் கண்டிப்பாக இருக்கும். பால் பாயசம், பருப்பு பாயசம் என்று ஏதாவது ஒன்றை கண்டிப்பாக செய்வர். இந்த கோடை காலத்தில் குளுகுளுப்பாக குடிக்க, செட்டிநாடு ஸ்டைலில் பழ பாயசம் செய்யலாம். செட்டிநாடு என்றாலே சைவ, அசைவ உணவுகளுக்கு பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. செட்டிநாடு ஸ்டைலில், பழ பாயசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

இரண்டு கப் பால்

முக்கால் கப் கன்டென்ஸ்டு மில்க்

ஒரு மாதுளை பழம்

புளிப்பு இல்லாத ஒரு மாம்பழம்

ஒரு ஆப்பிள்

திராட்சை ஒரு கொத்து

ஒரு வாழைப்பழம்

பாதாம் 15

ஐந்து பிஸ்தா

இரண்டு ஏலக்காய்

சர்க்கரை ஒரு ஸ்பூன்

பச்சரிசி தேவையான அளவு

பத்து முந்திரி

செய்முறை

பச்சரிசியை ஒரு பாத்திரத்திலும், முந்திரி, பாதாமை இன்னொரு பாத்திரத்திலும் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு ஊற வைக்கவும். ஊறிய பின் பாதாமின் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த பாதாம், ஊற வைத்த முந்திரி, பச்சரிசியை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, தேவையான அளவு உப்பு, மஞ்சள் துாள் சேர்த்து மிதமாக சூடானதும் அடுப்பை அணைக்கவும். இந்த தண்ணீரில் திராட்சையை போட்டு அலசி எடுத்து கொள்ளவும். பின், திராட்சையை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். மாதுளை பழத்தை தோல் உரித்து எடுத்து கொள்ளுங்கள். ஆப்பிள், மாம்பழத்தின் தோல்க ளை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பா தாம், பிஸ்தாவையும் பொடிசாக நறுக்கி, வீட்டில் இருக்கும் நட்ஸ் வகைகளையும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அடுப்பை ஆன் செய்து கனமான பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றி நன்கு பொங்கியதும், அடுப்பை மிதமான சூ ட்டில் வைக்கவும். இதனுடன் பச்சரிசி சேர்த்து அரைத்து கலவை, நட்ஸ் கலவையை சேர்த்து கிளறவும்.

இதனுடன் கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து, ஏலக்காய், சர்க்கரை சேர்த்து பால் சிறிதளவு திக்கானதும் அடுப் பை அணைக்கவும். பால் நன் றாக ஆறியதும் நறுக்கி வைத்திருக்கும் பழங்கள், நட்ஸ் சேர்த்து கலந்து விட்டால் செம டேஸ்ட்டான செட்டிநா டு பழ பாயசம் ரெடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us