தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/அவசரத்துக்கு செய்யலாமே பிரட் ஊத்தப்பம்!

அவசரத்துக்கு செய்யலாமே பிரட் ஊத்தப்பம்!

அவசரத்துக்கு செய்யலாமே பிரட் ஊத்தப்பம்!


UPDATED : அக் 24, 2026 02:49 AM

ADDED : அக் 23, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 02:49 AM ADDED : அக் 23, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

தினமும் காலை ஒரே விதமான சிற்றுண்டி செய்தால், குடும்பத்தினர் எரிச்சல் அடைவர். வீட்டில் சில பொருட்களை வைத்து, 'பிரட் ஊத்தப்பம்' செய்யலாமே. சுவையும் அதிகம்; செய்வதும் எளிது.

தேவையான பொருட்கள்



l பிரட் - 6 ஸ்லைஸ்

l சிறிய ரவை - அரை கப்

l தயிர் - அரை கப்

l அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

l வெங்காயம் - 1

l தக்காளி - 1

l கேரட் - 1

l பச்சை மிளகாய் - 2

l கொத்துமல்லி - ஒரு கைப்பிடி

l உப்பு - தேவையான அளவு

l எண்ணெய் - தேவையான அளவு

l மைதா - அரை கப்

செய்முறை



முதலில் பிரட் ஸ்லைஸ்களை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, மிக்சியில் போடவும். இதில் ரவை, மைதா, தயிர், சிறிதளவு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். மாவில் சுவைக்கு தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். இது, தோசை மாவை விட, சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.

வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவி கொள்ளவும். அதன்பின் அடுப்பில் தோசைக்கல் வைத்து, சூடானதும் அரைத்து வைத்துள்ள மாவை கரண்டியால் ஊற்றவும். மெல்லியதாக இருக்க கூடாது; அடை போல ஊற்றவும். இதன் மீது நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, கேரட், பச்சை மிளகாய். கொத்துமல்லியை துாவி, தோசைக்கரண்டியால் மெதுவாக அழுத்தவும்.

சுற்றிலும் எண்ணெய் ஊற்றி மூடவும். வெந்த பின் திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்தால், சுவையான பிரட் ஊத்தப்பம் தயார். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது சாம்பார் பொருத்தமாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us