ADDED : ஆக 21, 2025 11:04 PM

கலபுரகி மாவட்டம், அப்ஜல்புராவில், 2025 - 26ம் ஆண்டின் தாலுகா அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்கவுள்ளன. கர்நாடக விளையாட்டு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு போட்டிகள், இம்மாதம் 25ம் தேதி துவங்கவுள்ளன.
விளையாட்டு துறை சார்பில் வெளியிட்ட அறிக்கை:
ஆண்டுதோறும் அப்ஜல் புராவில், தாலுகா அளவிலான விளையாட்டு போட்டிகள் நடப்பது வழக்கம். 2025 - 26ம் ஆண்டின் போட்டிகள் ஆகஸ்ட் 25ம் தேதி துவங்கவுள்ளன. விளையாட்டு போட்டிகளில் அத்லெட்டிக்ஸ், யோகா, வாலிபால், புட்பால், த்ரோபால், கோகோ விளையாட்டுகள் நடக்கவுள்ளன.
போட்டிகளில் பங்கேற்க விரும்பும் விளையாட்டு வீரர்- - வீராங்கனையர், தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல் பெற, தாலுகா உடற்பயிற்சி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் நாகேஷ் கங்கனள்ளி - 99007 82260, ராஜு சவ்ஹான் - 70191 67243 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -