ADDED : செப் 04, 2025 11:23 PM

பெங்களூரு,: பெங்களூரில் டிசம்பர் 6ம் தேதி 'மிட்நைட் மாரத்தான்' எனும் இரவு நேர ஓட்டப்பந்தயம் நடக்க உள்ளது.
'பாதுகாப்பான நகரத்திற்கான ஓட்டம்' என்ற கருப்பொருளை மையப்படுத்தி, பெங்களூரில் ஆண்டுதோறும், மிட்நைட் மாரத்தான் எனும் இரவு நேர ஓட்டப்பந்தயத்தை, பெங்களூரு ஐ.டி., காரிடார் அமைப்பு நடத்துகிறது. இதுவரை 17 ஆண்டுகள், 'மிட்நைட் மாரத்தான்' போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டிற்கான மிட்நைட் மாரத்தான், வரும் டிசம்பர் 6ம் தேதி நடக்கிறது.
ஒயிட்பீல்டில் உள்ள கே.டி.பி.ஓ., மைதானத்தில் இருந்து மாரத்தான் துவங்குகிறது. இதில் இந்தியா, வெளிநாடுகளைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர், வீராங்கனையர், ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்வோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கலந்து கொள்வோர், www.midnightmarathon.in என்ற இணைய முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.