தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வட மாநிலத்தில் தீபாவளி பண்டிகையின் போது வீடுகளை ஒளிரவைக்கும் விளக்குகளுக்கு எப்போதும் முதன்மை இடம் உண்டு. மும்பையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு, வீடுகளை அலங்கரிக்க சாலைவோரக் கடைகளில் தொங்கவிடப்பட்டுள்ள கண்கவர் வண்ண விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்.
31-Oct-2026

ShareTweetShareShare

2/

இந்தியாவின் குங்குமப்பூத் தலைநகராக ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாம்பூர் பகுதி திகழ்கிறது. இங்கு விளையும் இந்த குங்குமப் பூ அதன் அடர் ஊதா நிறம், நறுமணம் மற்றும் மருத்துவக் குணங்களுக்காக உலகப் புகழ்பெற்றது. வயலில் பூத்துக் குலுங்கும் அப்பூக்களை ஆர்வத்துடன் சேகரிக்கும் பெண்.
31-Oct-2026

3/

ஸ்ரீநகரில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ என்ற விழிப்புணர்வு பேரணியில், தேசியக்கொடியை ஏந்தி உற்சாகமாக பங்கேற்ற பாதுகாப்புப் படை வீரர்கள்.
31-Oct-2026

4/

வடகிழக்குப் பருவமழையால் கிடைத்த இயற்கையின் கு(கொ)டை. இடம்: கோவை குற்றாலம்.
31-Oct-2026

5/

முப்பெரும் விழா திருப்பூர் விஜயமங்கலம் சசூரி கல்லூரியில் நடந்தது. அதில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையனுக்கு கல்லூரி தலைவர் ராமசாமி கேடயம் வழங்கினார்.
31-Oct-2026

6/

குங்குமப்பூ தயாரிக்கப்படும் குரோக்கஸ் மலர்கள் ஜம்மு - காஷ்மீரில் அதிகளவில் விளைகிறது. ஸ்ரீநகர் அருகே பாம்பூர் கிராமத்தில் குரோக்கஸ் மலர் அறுவடை மும்முரமாக நடக்கிறது.
31-Oct-2026

7/

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படாமல் தாமிரபரணி ஆற்றில் நேராக கலப்பதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது.
31-Oct-2026

8/

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நெல் சாகுபடி காண ஆரம்ப கட்ட பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர். இடம்: சாம்பவர் வடகரை, தென்காசி.
31-Oct-2026

9/

சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பாலத்தில் வாகனம் ஒன்று பழுதாகி நின்றதால் தேனாம்பேட்டையில் இருந்து சேப்பாக்கம் வரை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள். இடம். ஆயிரம் விளக்கு
31-Oct-2026

10/

விலைவாசி உயர்வை கண்டித்து சென்னை பாரிமுனை குரலகம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன முறையில் காய்கறிகளை மாலையாக அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us