திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணேச ராஜா, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு தொண்டர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டார். அது சரி எம்ஜிஆர் சிலை எங்கே என்கிறீர்களா? இப்ப அவரா முக்கியம்?
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.