சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேனியில் மண்டபம், ஹோட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ரஞ்ஜித் சிங் பேசினார். ( இடமிருந்து) ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தமிழரசி, டி.ஆர்.ஓ. ராஜகுமார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.
புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு கால தாமதம் ஆவதால், அமைச்சர்கள் பயன்படுத்திய அரசு கார்கள் பயன்பாட்டிற்கு வராமல் சட்டசபை அருகில் உள்ள சர்க்கிள் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தென்படுகின்றன.