அதிமுக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு நடைபெற்று வரும் வகையில் கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படக்குறிச்சி கிராமத்தில் வேட்பாளர் பெயரை மட்டும் விட்டுவிட்டு இரட்டை இலை சின்னம் வரையப்பட்டுள்ளது.
காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜயை பார்ப்பதற்காக கொளுத்தும் வெயிலில் காத்திருந்த அவரது ரசிகர் ஒருவர் மயங்கி விழுந்துவிடாமல் இருக்க தலையிலும், முகத்திலும் பாட்டில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.