வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையால் முன்பதிவு செய்தும் கிடைக்காத வாடிக்கையாளர்கள் கேஸ் ஏஜென்சி வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.இடம் : திருவான்மியூர்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற பிரசாரத்தில் மேடையில் ஆம்ப்ளிபயர் சத்தமாய் இருப்பதாக கூறி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அப்புறப்படுத்தினார்
தினமலர் நாளிதழ் கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன் இணைந்து புதுச்சேரி சுகன்யா கன்வர்ஷன் சென்டரில் வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் பிரிவு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த மாணவ மாணவியருக்கு ரமேஷ் பிரபா பரிசளித்தார்.
தினமலர் நாளிதழ் கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன் இணைந்து புதுச்சேரி சுகன்யா கன்வர்ஷன் சென்டரில் வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் பிரிவு நிகழ்ச்சியில் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா விளக்கம் அளித்தார்.
நாகர்கோவிலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொண்டர்கள் சாக்கை கிழித்து அதை குடையாக பயன்படுத்தி வெயில் இருந்து தற்காத்து கொண்டனர்.