குரோம்பேட்டை பஸ்நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடை செய்ய அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலிகள் உடைந்தும் குப்பைகளை கொட்டப்பட்டும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்தது. உடன் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் மற்றும் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்.
ஓட்டு போடும் தேர்தல் நாள் வரை உங்களை அழைத்துச் செல்ல ஷேர் ஆட்டோக்களை அனுப்பி, ஒவ்வொரு ஆளுக்கும் காசு கொடுத்து பிரசாரத்திற்கு அழைத்துச் சென்ற பின் அம்போ என்று விட்டுவிடுவர் இன்றைய அரசியல்வாதிகள்.
கிராமங்களில் சுவர் விளம்பரம் வரைவதில் கட்சியினர் சமமாக பிரித்துக் கொள்கின்றனர். கோவை தொண்டாமுத்தூர் தொகுதி பன்னீர்மடை பகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சுவர் விளம்பரம் இது.
கடலூர் செயின்ட் ஆன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தபால் ஓட்டு பதிவு செய்ய வந்த ஓட்டுப்பதிவு அலுவலர்களின் மொபைல் போன் பாதுகாப்பாக பையில் வைக்க ப்பட்டு இருந்தன.