சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சார்பில் கண்களில் கருப்பு துணிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரான் ஏவிய ஏவுகணை ஒன்றை இஸ்ரேல் இடைமறித்து அழித்தது. இதன் பெரிய சிதறல் மேற்கு கரையின் பெடுயல் குடியிருப்பு பகுதியில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில் விழுந்து கிடந்தது. அதை ஆச்சரியமுடன் பார்த்த குழந்தைகள்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களின் நேர்காணல் முடிவடைந்த நிலையில், தொகுதிகள் ஓட்டு சேகரிக்க தலையில் உதயசூரியன் தொப்பி அணிந்து புறப்பட்ட திமுக தொண்டர் வடிவேல்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த கபாலீஸ்வரர் உடனுறை கற்பகாம்பாள்.
ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் ஓடும் தாவி ஆற்றின் அருகே அமைக்கப்பட்டு உள்ள தேனீ வளர்ப்பு மையத்தில், பெண் தொழிலாளர் ஒருவர் தேனீப் பெட்டிகளை ஆய்வு செய்தார். இப்பகுதியில் நிலவும் இதமான தட்பவெப்பநிலை மற்றும் பூத்துக் குலுங்கும் மலர்களால் தேன் உற்பத்தி அதிகரித்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பேருந்து நிறுத்தங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள்.இடம் : ஆழ்வார்பேட்டை