சென்னை, எழும்பூரில் 1,000 மாணவியர் பங்கேற்ற, சஹஸ்ரதல பத்மாராதனம் என்ற ஸ்லோகம் பாடும் நிகழ்ச்சயில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று ஆசி வழங்கினார்.
தினமலர் கார்னிவல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி, சென்னை திருவேற்காடு ஆர்.எம்.கே., சோழா குடியிருப்பில் நடந்தது. இதில் நடந்த கோலப்போட்டியில் பங்கேற்ற குடியிருப்புவாசிகள்.
டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள புகழ்பெற்ற அமிர்த உத்யானம் எனப்படும் மலர்த்தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக வரும் 3ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை திறக்கப்படுகிறது. தோட்டத்தில் பூத்து குலுங்கிய வண்ண மலர்கள்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் 2019, பிப்.,14ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அந்த வடுக்களில் இருந்து மெல்ல மீண்டும் புதுப்பொலிவை புல்வாமா பெற்றுள்ளது.
மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில் சென்னையில் நடந்த நாய் கண்காட்சியில் பங்கேற்று அசத்திய விதவிதமான நாய்கள். இடம்: செயின்ட் பீட்ஸ் பள்ளி மைதானம், மயிலாப்பூர்.