வால்பாறையில் குளு… குளு… சீசன் நிலவும் நிலையில், அந்தி சாயும் நேரத்தில் பசுமையான தேயிலை செடிகளை தாலாட்டி, ஆதவன் மறையும் அற்புதமான காட்சி. இடம்: மாணிக்கா எஸ்டேட், வால்பாறை.
குடியரசு தின விழாவில் வெறும் கைகளால் ஓடுகளை உடைத்து மனதளவில் மட்டுமல்ல, உடலளவிலும் நாங்கள் திடமானவர்கள் என்பதை கராத்தே போட்டி வாயிலாக நிரூபித்த பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதி மாணவியர். இடம்: வ.உசி. மைதானம்.
மத்திய பிரதேசத்தின் போபாலில் நடந்த குடியரசு தின கொண்டாட்டங்களுக்குப் பின், ஆயுதப்படையைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் தன் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார். அதில் தாய்ப்பாசத்துடன் தாய்நாட்டு பாசமும் கலந்திருந்தது.