திருப்பூர், பெருமாநல்லூரில் உள்ள குமரன்குன்று முருகன் கோவில் சென்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பரமணியத்தை போலீசார் தடுத்ததில் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்கு, தபால் ஓட்டு பதிவு, திருப்பூர் டவுன்ஹாலில் நடந்தது. தபால் ஓட்டு செலுத்த வரிசையில் காத்திருந்த போலீசார்.
தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். இடம்: காந்திபார்க், கோவை.
ஓட்டு சாவடியில் மாற்று திறனாளிக்கு உதவும், கல்லூரி மாணவிகளுக்கு, வீல் சேர் பயன்படுத்தும் முறை குறித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பயிற்சியளிக்கப்பட்டது.