திருப்பூர், தாராபுரம் ரோடு, வேலாயுதசாமி மண்டபத்தில் நடந்த, கொங்கு பன்னாட்டு வர்த்தகம் மற்றும் கலாசார நிறுவனத்தின் (கிட்கோ) நான்காம் ஆண்டு துவக்க விழாவில், நவீன் பிரபஞ்ச நடனக்குழுவின் வள்ளிக் கும்மியாட்டம் இடம் பெற்றது.
தினமலர் மற்றும் நம்ம பேமிலி இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.இடம் : தண்டலம்.
கடலூர் முதல்நகர் சோனக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கலைஞரிடம் மொபைல் போனில் படம் பிடித்த சிறுமிகள்.