மக்களின் எதிர்ப்பையும் மீறி, கோர்ட் உத்தரவையும் மதிக்காமல், அதிகாரிகளால் உருவாக்கப்பட்டு வரும் புதிய குப்பை கிடங்கால், 112 ஏக்கர் பரப்புள்ள முடிச்சூர் ஏரி அழிவை நோக்கி பயணிக்கிறது. இடம்: வண்டலூர்- முடிச்சூர் இணைப்பு சாலை.
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் மணல் சிற்பங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டார்.
கோவை, பேரூர் செட்டிபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வந்த தொகுதி வேட்பாளருமான வேலுமணியை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
கோவை, பேரூர் செட்டிபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி வழங்கப்பட்டது