ஆண்டுதோறும் டிசம்பர் இறுதியில் இருந்து, 40 நாட்கள் கடுமையான குளிர் நிலவும் பருவத்தை, ஜம்மு - காஷ்மீரில், 'சில்லாயி கலான்' என்று அழைக்கின்றனர். அங்குள்ள குல்மார்க்கில், பனி படர்ந்த பள்ளத்தாக்கை ரசித்த சுற்றுலா பயணியர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தில் நடந்த தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து கை அசைத்தார்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், பொது கூட்டம் பாண்டியன் நகரில் நடந்தது. அதில், பங்கேற்ற மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு நினைவு பரிசு வழங்கிய கட்சியினர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், பொது கூட்டம் பாண்டியன் நகரில் நடந்தது. அதில், பங்கேற்ற மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு கை கொடுக்க திரண்ட கட்சியினர்.
தினமலர் நாளிதழ் பட்டம் வினாடி வினா இறுதிப்போட்டி கோவை சின்னவேடம்பட்டி எஸ்.என்.எஸ்., அகாடமியில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பட்டம் பொறுப்பாசிரியர் வெங்கடேஷ் பரிசு வழங்கினார்.