அந்தி சாலையும் மாலை வேளையில் கதிரவன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பக்கிங்காம் கால்வாய் கடலில் கலக்கும் இடமான படகு குழாமில் படகு சவாரி செய்யும் நபர்.இடம் : முட்டுக்காடு
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அலுவலக நுழைவாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டமாக வந்தார். அவர்களை தடுத்த போலீசார் ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி கொடுத்தனர்.
கோவை அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உறுப்பினர் பிரேம் குமார் மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.