பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஜதி பல்லக்கு ஊர்வலத்தை கவர்னர் ரவி கொடி அசைத்து துவக்கி வைத்தார்
தென்திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் வைபவம் நடந்தது. இதில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி புறப்பட்டு நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார்.
மெரினா நீச்சல் குளம் அசுத்தம் அடைந்து காணப்படுவதாக தினமலர் நாளிதழ் வந்த செய்தி. சுத்திகரிப்பு பணி முடிந்து தூய்மையாக தண்ணீர் காணப்படுவதால் வெயிலில் குளியல் போடும் இளைஞர்கள்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் பூ, பழங்கள், காய்கறிகளால் சிறப்பு அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது .
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் வீர வணக்க நாள் அஞ்சலி சென்னை எழும்பூர் தீயணைப்பு தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் தீயணைப்புத்துறை இயக்குனர் சீமா அகர்வால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.