பாரதியாரின் 144வது பிறந்தநாளான இன்று திருநெல்வேலியில், ம.தி.தா., ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் அவர் பயின்ற வகுப்பறையில் பாரதியார் வேடம் அணிந்து பாடம் பயின்ற மாணவ - மாணவியர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார கிராமங்களில் பசுமை மின்சாரம் உற்பத்தி அதிகளவில் நடந்து வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள சோலார் தகடுகள் கடல் போல் காட்சியளிக்கின்றது.
புதுச்சேரி அடுத்த பஞ்சவடி பஞ்சமுக ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்ஜநேயர் சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு முதல் நாளான பூர்வாங்க பகவத் பிரார்த்தனை பூஜை நடந்தது.
குன்றத்தூர் அருகே உள்ள காவனூர் சிறுகளத்தூர் குன்றின் மீது அமைந்துள்ள பர்வதவர்தினி உடனுறை ராமநாத ஈஸ்வரர் கோவிலில் லட்சதீபங்கள் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரை தேசிய நெடுஞ்சாலை பணி இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது மீண்டும் சாலை அமைக்கும்படி துவங்கியுள்ளது. இடம்: வடக்குத்து வடலூர் கடலூர்.