நீலகிரி மாவட்டம் குன்னூர் லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் காட்சி முனை செல்லும் சாலையோர தேயிலை தோட்ட பகுதிகளில் மேகமூட்டம் நிலவிய போதும், செல்பி மற்றும் போட்டோ எடுக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பேருந்து நிறுத்தங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள்.இடம் : ஆழ்வார்பேட்டை
சென்னை எலியட்ஸ் கடற்கரையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வகையில் மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து வைக்கப்பட்டுள்ள மின்சார சார்ஜிங் நிலையம்.இடம் : பெசன்ட் நகர்
மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து கிராமத்தில் கருப்பு கொடி ஏற்றி பேனர்கள் வைத்துள்ளனர்...
நாங்க எப்பவுமே அ.தி.மு.க., துண்டை போட்டு த.வெ.க., தொண்டர்களை பிடிப்பது தான் எங்கள் வேலை (போட்டோ பிடிக்கிறது) தான் . மதுரையில் நடந்த அ.தி.மு.க.,இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.