வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் 93வது விமானப்படை தினம் விரைவில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்ட நம்வீரர்கள், மூவர்ண கொடியின் வண்ணத்தை வானில் வரைந்து பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜயை பார்ப்பதற்காக கொளுத்தும் வெயிலில் காத்திருந்த அவரது ரசிகர் ஒருவர் மயங்கி விழுந்துவிடாமல் இருக்க தலையிலும், முகத்திலும் பாட்டில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.