சகோதர பாசத்தை கொண்டாடும் பாய் தூஜ் பண்டிகை வட மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. யமுனை நதியில் நீராடி தன் சகோதரின் நெற்றியில் திலகமிட்டு பிரார்த்தனை செய்த சகோதரி. இடம்: பிரயாக்ராஜ், உபி
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு செய்தார். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
கோவையில் இயங்கி வந்த பிரபலமான தனியார் காப்பி கடை சிலிண்டர் தட்டுப்பாடு காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இடம்: சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோடு