தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, வரும் 23ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்காக விற்பனைக்கு தயாராகும் தீச்சட்டிகள். இடம்: குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்
சாத்தூரில் போட்டியிடும் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக தேசிய தலைவர் நிதின் நபின் ரோடு ஷோ நடத்தினார். இதில் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தஞ்சாவூரில் திலகர் திடலில் நடந்த திமுக பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து பேசிய நிலையில், மேடையின் எதிரே தெரிந்த பெரிய கோவில் கோபுரம் ஸ்டாலின் கண்ணில் படாத அளவுக்கு பெரிய திரை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.