தூய்மை பணியாளர்கள் தனியார் மையமாக்குவதை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். இடம்: ராஜீவ் காந்தி நகர் 2வது தெரு,கொருக்குப்பேட்டை.
கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வாக்குறுதிகளில் சொல்லப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்த மாதிரி படைப்பு இடம் பெற்று இருந்தது.
கோவை கொடிசியாவில் நடந்த தேஜ கூட்டணி பொது கூட்டத்தில் பண்ணாரி அம்மன் படத்தை பிரதமர் மோடியிடம் வழங்கிய முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பீகாரின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.