திருப்பூர் கருவம்பாளையம் ராஜவாய்க்கால் வீதியில் உள்ள பார்மா கம்பெனி ஜெனரேட்டரில் தீ பிடித்து, அருகில் இருந்த பனியன் நிறுவனத்திலும் தீ பிடித்தது. தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா தலைநகரான சண்டிகரில் உள்ள சுக்னா ஏரி பகுதியில் நம் விமானப் படையின் சூர்ய கிரண் ஏரோபாட்டிக் குழுவினரின் விமான சாகச நிகழ்வு நடந்தது. ஒன்றோடு ஒன்று உரசுவதை போல் சென்ற விமானங்களை பார்த்து உற்சாக மிகுதியில் கையசைத்து ஆர்ப்பரித்த சிறுவன்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு செய்தார். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
கோவையில் இயங்கி வந்த பிரபலமான தனியார் காப்பி கடை சிலிண்டர் தட்டுப்பாடு காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இடம்: சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோடு