கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், மூன்றரை ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு ரஷ்யா கடும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டது. ஏவுகணை தாக்குதலில் தீப்பற்றி எரிந்த கட்டடத்தை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் மணல் சிற்பங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டார்.
கோவை, பேரூர் செட்டிபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வந்த தொகுதி வேட்பாளருமான வேலுமணியை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
கோவை, பேரூர் செட்டிபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி வழங்கப்பட்டது