காசியில் ஓடும் கங்கை ஆற்றின் படித்துறைகளில் ஒன்றான, 'நமோ காட்'டில், 'கும்பிட்ட கை சிலை' உள்ளது. கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த சிலையில் பெரும்பாலான பகுதி நீரில் மூழ்கி உள்ளது. இடம்: காசி, உ.பி.,
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு செய்தார். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
கோவையில் இயங்கி வந்த பிரபலமான தனியார் காப்பி கடை சிலிண்டர் தட்டுப்பாடு காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இடம்: சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோடு
புதுச்சேரியில் 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் ஊனமுற்றவர்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து தபால் ஓட்டுகளை போட்டனர். உப்பளம் தொகுதியில் மூதாட்டி ஒருவர் தனது ஓட்டை போட்ட காட்சி.