மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து பவானிசாகர் டேம் நீர் பிடிப்பு பகுதி அருகே உள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ளவாழை பயிர்கள் நீரில் மூழ்கின இடம் சிறுமுகை அடுத்துள்ள சித்தன் குட்டை கிராமம்
'சென்னையில் சங்கீத உற்சவம்' நிகழ்ச்சியில் பிரபல வயலின் வித்வான் மைசூர் டாக்டர் மஞ்சுநாத், புல்லாங்குழல் இசைக் கலைஞர் பாம்பே ரோணு மஜூம்தார் ஆகியோரின் ஜுகல்பந்தி நடந்தது.
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.