பொதுமக்கள் விடுமுறை தினத்தில் அதிகம் கூடும் கடற்கரை சாலையில் மாநகராட்சி சார்பில் புதிதாக வைக்கப்பட்டுள்ள சிற்பி வடிவ இருக்கைகள்.இடம் : பாலவாக்கம் கடற்கரை
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் எழும்பூர் தாளமுத்து நடராஜர் மாளிகை அருகே உள்ள மேம்பாலத்தில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவைப்புதூர் பகுதியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில், வாகன ஓட்டிகளுக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது.