வால்பாறையில் தொடர்ந்து பெய்யும், தென்மேற்கு பருவமழையால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மேல்நீராறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் சோலையாறு அணைக்கு பாய்ந்து செல்கிறது.
சென்னை வியாசர்பாடி, பேசின்பாலம் ரயில் நிலையத்திற்கு இடையே மின்சார ரயில் மீது பீர் பாட்டில் பேச்சு பயணிகள் படுகாயம். இந்த சம்பவத்தினால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு.
திருப்பூர் குப்பாண்டம்பாளையம் பகுதியில், மாநகராட்சியால் அகற்றப்படாத குப்பை தீ பற்றி எரிந்தது. அப்பகுதி மக்களுக்கு தீயணைக்கும் கருவி மற்றும் பொது கூட்ட நோட்டீஸ் வழங்கிய பா.ஜ.கட்சியினர்.
தை மாதம் உழவரின் உழைப்பை கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்காக ஒரு புறம் அறுவடையும், மறுபுறம் பசுமை வயலும் ஒரே நேரத்தில் காட்சியளிக்கின்றன.இடம்: புதுச்சேரி அரியூர் - கீழர் சாலை.