சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ அன்புமணி சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் கூட்டணி பேச்சு நடத்தினர். அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது என அன்புமணி அறிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழா அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை கலெக்டர் பிரவீன் குமார் முன்னிலையில் நடைபெற்றது.
போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அரசு பேருந்தை பிடிக்க சாலையை கடக்கும் பொதுமக்கள். இடம்: கோவை அவிநாசி ரோடு சின்னியம்பாளையம்.
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகிக்க கோரி கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூரில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்ததை கண்டித்து கோவை காந்திபுரம் சிக்னலில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்.